ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 185 டன் பட்டாசு குப்பை கழிவுகள் அகற்றம்

சென்னை: ஒரே நாளில் அகற்றம்... ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் 185 டன் பட்டாசு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

தீபாவளியை பட்டாசு வெடித்து மக்கள் குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பட்டாசு குப்பைகள் 2 நாட்களில் மலை போல் குவிந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 145 முதல் 150 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுவது வழக்கம். ஆனால் தீபாவளியையொட்டி கூடுதலாக 40 டன் பட்டாசு குப்பைகள் சேர்ந்து 185 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இக்குப்பைகளை அகற்ற 259 வாகனங்களில் மொத்தம் 782 தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி அதிகாரிகள், பல்வேறு இடங்களில் முகாமிட்டு தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.