தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 6,200 பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் .... அமைச்சர் ஐ. பெரியசாமி

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், அரசு பல வகையான மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் ரேஷன் கடைகளில் மொபைல் செயலிகள் மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெற்று கொள்ளும் முறை கொண்டுவரப்பட்டது.

இதனை அடுத்து இந்த நிலையில் மக்களுக்கு எவ்வித இடையூறும் கால தாமதமும் இல்லாமல் ரேஷன் பொருட்களை வழங்கும் வகையில் ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுநர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பணி ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி கொண்டு வருகிறது. இதனால் ஒரே ஊழியர்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தடுக்கும் வகையிலும் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கிலும் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் சுமார் 6,200 பணியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் ரேஷன் கடை காலிப்பணியிடங்களுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பதாரர்களின் 10 ,12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு நேரடி நேர்காணல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.