தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

சென்னை: உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி .... தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்

அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.