ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களை காட்டிலும் நல்ல தரம் மற்றும் குறைவான விலையில் ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், வாடிக்கையாளர்களும் அதிகளவில் ஆவின் பால் பாக்கெட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

மேலும், கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது ஆவின் நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கி கொண்டு வருகிறது. மேலும், பாலின் தரத்திற்கு ஏற்ப கொள்முதல் விலை வழங்கப்படுவதால் நாளொன்றுக்கு மட்டுமே 29.50 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மாட்டின் பராமரிப்பு செலவு அதிகம் என்பதால் பாலின் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்று பால் முதலீட்டாளர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்து உள்ளனர்.

இதையடுத்து பாலின் கொள்முதல் விலையை அதிகரிப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இவ்வாறு, பாலின் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டால் பால் பாக்கெட்களின் விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது.