பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறதா? தமிழக அரசு தீவிர ஆலோசனை

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும் பள்ளிகளில், கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சாதகமான சூழல் இல்லை என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நேற்று நடைபெற்ற திடீரென ஆலோசனையில், கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.