உலகையை மாற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்... பிரிட்டன் பிரதமர் பெருமிதம்

லண்டன்: உலகையே மாற்றும்... செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

லண்டனில் தொழில்நுட்ப வாரம் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய ரிஷி சுனக், சுகாதாரம் உணவு போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு உலகை மாற்றும் என்று தெரிவித்துள்ளார். எந்த ஒரு நாட்டையும் உலகிற்கு தலைமை தாங்கச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து வியப்பு அதிகரிப்பதாக கூறிய இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா சீனாவை அடுத்து இங்கிலாந்து தொழில்நுட்ப வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவால் பலர் வேலையை இழப்பது குறித்த அச்சம் கொண்டுள்ளனர் என்றும், அதனை தமது கவனத்தில் வைத்திருப்பதாகவும், ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.