வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மன்னர் வளைகுடா பகுதியில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு திசை நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இன்று தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து பிப்.4 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடிமின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. பிப். 5 ,6, 7ம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்‌ என அறிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.