விதிமீறல் வழக்குகள் குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் தகவல்

சென்னை: விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது சராசரியாக 6,000 விதிமீறல் வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது என்று சென்னை போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில், மோட்டார் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்வதன் மூலம் சாலை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகரில் நாள் தோறும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது சராசரியாக 6,000 விதிமீறல் வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது.

இதையடுத்து விதிமீறல்களில் ஈடுப்பட்டவர்கள், சரியான நேரத்தில் அபராதத்தொகையை செலுத்துவதில்லை. அவ்வாறு அபராதத்தொகையை செலுத்ததவர்களை, தொலைபேசியின் மூலம் தொடர்புக்கொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 11.04.2022 தொலைபேசி அழைப்பு மையம் அறிமுகப்படுத்தப்பட்டது

சிறப்பு முகாமில் விதிமீறல்களில் ஈடுபட்ட 4,083 வாகன ஓட்டிகளிடம் ரூபாய் 48,59,300/- வசூலிக்கப்பட்டு 16,072 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. அதிகபட்சமாக புனித தோமையர் மாவட்டம், துரைப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தினர் அபராதத்தொகையை வசூலித்துள்ளனர். வரும் காலங்களில் சிறப்பு முகாம்கள் தொடரும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.