அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு முதல்வர் மு க ஸ்டாலின் வெளியீடு

சென்னை: 4% அகவிலைப்படி உயர்வு ... தமிழகத்தில் அரசு துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதியாக 42 சதவீத அகவிலைப்படி பெற்று வந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நடப்பு மாதங்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை தமிழக அரசு எப்போது வெளியிடும் என அநேக ஊழியர்களும் காத்திருந்து வந்தனர்.

இதனை அடுத்து ஊழியர்கள் எதிர்பார்த்து இருந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தற்போது வெளியிட்டு உள்ளார்.


முதல்வரின் அறிவிப்பின்படி தமிழக அரசின் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே இதன் காரணமாக 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி உயர்வு காரணமாக ஊழியர்களின் சம்பளம் குறைந்தபட்சம் ரூ.7,000 முதல் உயரும். முதல்வரின் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு காரணமாக தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி அலை எழுந்து உள்ளது.