கிடுகிடுவென்று பரவிய கொரோனா... உடனே லாக்டவுனை அறிவித்த லெபனான்

மீண்டும் முழு ஊரடங்கு அமுல்... லெபனானில் கடந்த 4 நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தி உள்ளது.

மேற்காசிய நாடுகளில் ஒன்றான லெபனான், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாத மத்தியில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தாக்கம் வெகுவாக குறைந்ததால் வெற்றிகரமாக கொரோனாவை முறியடித்துவிட்டோம் என அறிவித்து படிப்படியாக ஊரடங்கை ரத்தும் செய்தது.

இந்தநிலையில், அங்கு கடந்த சில தினங்களாக கொரோனா மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. கடந்த 4 நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த லெபனான் அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 4 நாட்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.