திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்தை கடந்தது!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 483 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 483 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்தை கடந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,389ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 106 பேருக்கும், பூந்தமல்லியில் 80 பேருக்கும், திருவள்ளூரில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.