பிரதமரை டுவிட்டரில் பாலோ செய்யும் எலான் மஸ்க்

நியூயார்க்: திடீரென்று இந்திய பிரதமரை எலான் மஸ்க் பின்தொடர வேண்டிய தேவை என்ன என்று இணையவாசிகள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். காரணம் என்ன தெரியுங்களா?

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் உரிமையாளரான எலோன் மஸ்க், முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். இதன் மூலம் தொடர்ந்து செய்திகளில் வலம் வருகிறார்.

அவர் ட்விட்டரை வாங்கியபோது, அவரது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியாக வளர்ந்தது. ஆனால் எலோன் மஸ்க் உலகம் முழுவதிலுமிருந்து 195 பேரை மட்டுமே பின்தொடர்ந்தார்.

அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தற்போது இடம்பெற்றுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து இந்தியாவிற்கு சற்று பாதகமான செயல்களை செய்து வருகிறார். குறிப்பாக அதன் முன்னாள் சிஇஓ பராக் அகர்வால் உட்பட ஏராளமான இந்தியர்கள் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திடீரென்று இந்திய பிரதமரை எலான் மஸ்க் பின்தொடர வேண்டிய தேவை என்ன என்று இணையவாசிகள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தை தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளாரா என்றும் ட்விட்டர் பயனாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.