நேற்று தேர்வு முடிவு.. இன்று வாழ்க்கை முடித்த மாணவர்கள்..

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் நேற்று பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் தேர்வு முடிவு வெளிஆனது. இதில் பல மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் பலர் தோல்வி அடைந்தனர். நமது நாட்டில் தேர்ச்சியில் தோல்வி அடைந்தால் வாழ்க்கை முடிந்தது என்று சிலர் எண்ணி தற்கொலை தான் முடிவு என்று முடிவு எடுகின்றனர். இந்த நிலையில் தான், பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலாசனை வழங்க கல்வித்துறை முடிவு எடுத்தது. இந்த சுழலில் தோல்வி அடைந்த மாணவர்கள் கிட்டதட்ட 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக கல்வி துறை தகவல் கூறி உள்ளது.

மேலும் தற்கொலை செய்த 10 மாணவர்கள் அரசு பள்ளி சேர்ந்தவர் 1 மாணவன் தனியார் பள்ளி சேர்ந்தவன் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அதே போல் தேர்வு தோல்வி எதிரொலியாக தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 28 மாணவ மாணவிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்டனர் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளன.

தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை மட்டும் முடிவு அல்ல. நம்ப எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும். அடுத்தது என்ன என்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.