உலக அளவில் கொரோனா பாதிப்பு 1.9 கோடியாக உயர்ந்தது

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 7.22 லட்சமாகும்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. உலகில் 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கொரோனாவார் இதுவரை 19,523,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 7.22 லட்சமாகும்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1.64 லட்சமாக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 26 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். பிரேசிலில் 29 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 49,502 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இங்கு 99.702 பேர் பலியாகிவிட்டனர். இந்தியாவில் 20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நேற்று ஒரே நாளில் புதிதாக 61,455 நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகளவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா பாதித்த நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. இதுவரை இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 42,578 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.77 லட்சமாக உயர்ந்துள்ளது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 14,725 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இதுவரை 5.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 9,909 பேர் பலியாகிவிட்டனர்.

மெக்சிகோவில் 4,62,690 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருவில் 4.55 லட்சம் பேருக்கும் சிலியில் 3.68 லட்சம் பேருக்கும், கொலம்பியாவில் 3.67 லட்சம் பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் 3.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.