பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி..கல்வித்துறை அறிவித்து உள்ளது..

தமிழ்நாடு: பள்ளிக்கல்வித் துறையின் வருடந்தோறும் நடத்தப்படும் பள்ளி தலைமை பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தொடங்கியது.
அவ்வகையில்அரசு பள்ளிகளில் தலைமை பணி இடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தேதிகளை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி நடப்பாண்டுகான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு வரும் 11 முதல் 15 வரை நடைபெறும். இதுகுறித்து பள்ளிகல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பானை ஒன்றை வெளி இட்டுள்ளார்.
அதில் பள்ளிகல்வித்துறை நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசரியர். பட்டதாரி ஆசரியர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும் ஜூலை 11ம் தேதி அரசு நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசரியர்கள், பட்டதாரி ஆசரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூலை 12ம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடைபெறும் என்று தெரவித்துள்ளனர்.
அதுபோல் ஜூலை 13ம் தேதி அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், ஜூலை 14,15 ஆகிய தேதிகளில் இடைநிலை ஆசரியர், சிறப்பு ஆசரியர் மற்றும் பட்டதாரி ஆசரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளனர்.