ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் - போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்தால் பெரும்பரபரப்பு

ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழ்வது குறித்து உலகமெங்கும் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஒரே பாலின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் என்று கருத்து கூறி உள்ளார். ஓரின ஜோடிகளுக்கு ஆதரவாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்து வெளியிட்டிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு ஆவண படத்தில் இதனை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர், ஓரின சேர்க்கையாளர்கள், ஒரு குடும்பத்தில் இருக்க உரிமை உண்டு. அவர்களும் கடவுளின் பிள்ளைகள்தான். அவர்கள் குடும்பமாக இருக்கலாம். யாரும் அவர்களை வெளியேற்றவோ அல்லது பரிதாபப்படவோ கூடாது என்று கூறினார்.

மேலும் அவர், நாம் செய்ய வேண்டியதுதெல்லாம், ஒரு சிவில் ஐக்கிய சட்டம் இயற்றுவதுதான் என கூறி உள்ளார். ஓரின ஜோடிகளுக்கு ஆதரவாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்து வெளியிட்டிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஆஸ்டின், இது ஆச்சரியத்தை அளிக்கவில்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரான்சிஸ்சின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஆஸ்டின் பேட்டி அளிக்கையில், போப் ஆண்டவரின் கருத்து எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. பியுனோஸ் அயர்ஸ் ஆர்ச் பிஷப் என்ற நிலையில் இது அவரது கருத்தாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.