தீவிரமெடுக்கும் இன்புளுயன்சா .. மருத்துவமனையில் உயரும் நோயாளிகள்

சென்னை: மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிப்பு ... கொரோனா பேரிடருக்கு அடுத்த படியாக தமிழகத்தில் தற்போது இன்புளுயன்சா வகை வைரஸ் காய்ச்சல் பரவி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்த காய்ச்சலால் மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளதையடுத்து மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தற்போது இக்காய்ச்சலுக்கு முதியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆளாகின்றனர்.

இதையடுத்து இந்த காய்ச்சல் காரணமாக மதுரை மாவட்டம் அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிக்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. தற்போது காய்ச்சல் பிரிவில் பரிசோதனை மேற்கொள்ள அதிக அளவில் மக்கள் வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமான நாட்களில் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் காரணமாக 250 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கபடும் வேளையில் தற்போது இந்த எண்ணிக்கை 300க்கும் மேல் உயர்ந்துள்ளது.

அதிலும் குறிப்பாக குழந்தைகள் நலப்பிரிவில் நாள் ஒன்றுக்கு 20 – 25 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.