செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 11,308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,43,297 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 11,308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11,579 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8,224 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 218 பேர் பலியாகியுள்ளனர்.