இனி இவர்கள் ரேஷன் பொருட்கள் பெறுவது சிக்கல்


சென்னை: KYC செயல்முறையை முடிக்காத மற்றும் 3 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் ரேஷன் கார்டு ரத்தாக வாய்ப்பு . ..ரேஷன் கார்டுகள் மூலமாக பொதுமக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை மலிவு விலையில் பெற்று பயனடைந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது ரேஷன் பொருட்களை பெறுவதற்கான வழிமுறையை அரசு வெளியிட்டு உள்ளது. அதாவது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் KYC சரிபார்ப்பை சரியான தேதிக்குள் முடிக்காவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், தொடர்ந்து 3 மாதங்களாக ரேஷன் கார்டினை பயன்படுத்தாமல் எந்தவித ரேஷன் பொருட்களையும் வாங்கவில்லையெனில் ரேஷன் கார்டுகள் ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைக்கு இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே இந்த புதிய விதிமுறைகள் அமலாகியுள்ள நிலையில் கூடிய விரைவில் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.