ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் லேசான நிலநடுக்கம்

பைசாபாத்: லேசான நிலநடுக்கம்... ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவு கோலில் 4 புள்ளி 3 அலகுகள் பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் கூறியள்ளது.

அதிகாலை 3.20 மணியளவில் ஃபைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 120 கிலோ மீட்டரில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.