தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய கால அட்டவணை

இந்தியா: நடப்பு ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 11 ரயில்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளது ... மத்திய அரசு வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில்களை அறிமுகம் செய்து உள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு புதிய கால அட்டவணை நேற்று வெளியிட்டது.

இதையடுத்து அதில் ரயில்கள் பயணிக்கும் தொலைவு ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளது. அத்துடன் மேலும் மதுரை – தேனி ஆகிய வழித்தடங்களில் பயணிக்கும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 4 ரயில்கள் நீட்டிப்பு விவரம் விரைவில் அறிவிக்கப்படும். அத்துடன் மேட்டுப்பாளையம் கோவை இடையே வாரம் 6 நாட்கள் இயக்கப்பட்ட மெமு சிறப்பு ரயில் இனி வாரம் முழுவதும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே சென்னை சென்ட்ரல்-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்பட்ட விரைவு ரயில் போடிநாயக்கனூர் வரை ஜூன் 16-ம் தேதியிலிருந்து நீட்டிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டு உள்ளது.