வாட்ஸ்ஆஃபில் புதிய அப்டேட்…..ஒரு குரூப்பில் 512 பேர்

Meta நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் whatsapp செயலியை உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.

மற்ற செயலியை காட்டிலும் whatsapp செயலியில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளதால் தங்களது வேலை விஷயத்திற்காகவும் வாட்ஸ்ஆஃப் செயலியை பயன்படுத்துகிறார்கள்.

மேலும், வாட்ஸ்ஆஃப் பயனாளர்களுக்கு அவ்வப்போது கூடுதல் வசதிகளுடன் கூடிய அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.

WhatsApp குரூப்பில் தற்போது வரைக்கும் 256 உறுப்பினர்கள் வரை சேர்ந்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கூடுதலாக ஒரு குரூப்பில் 512 பேர் வரை சேரும் வசதிசெய்யப்பட்டுள்ளது.

முன்பு வாட்ஸ்ஆஃப் செயலியில் குறுஞ்செய்திக்கு ரியாக்ட் செய்யும்படியான வசதி வழங்கப்பட்டது. வாட்ஸ்ஆஃப் குரூப்பில் மற்றவர் அனுப்பும் செய்தியை குரூப் அட்மின் நீக்கும்படியான வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆஃப்பில் 2GB வரைக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிரும் வசதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.