20 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்யலாம்; மத்திய அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 20 சதவீதம் வரை அதிகரித்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் மழையால் நெல் பயிர்கள் பாதிப்படைந்திருந்தது.

அதன் பின்னர் இந்த பாதிப்பு பற்றி மத்தியக்குழு ஆய்வு நடத்தியிருந்தது. இதில் நெற்பயிர் நிர்ணயித்த அளவை விட ஈரப்பதம் அடைந்திருந்தாலும் கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத வரம்பை 20% வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனை அடுத்து முன்னதாக மத்திய அரசு பயிர்கள் கொள்முதல் செய்வதற்கான நிர்ணயிக்கப்பட்ட 17% ஈரப்பதம் என்பது அவசரக்காலங்களில் 19% வரை உயர்த்த மாநில அரசுக்கு அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.