பிரதமரின் தாயார் குணமடைய பிரார்த்திக்கிறேன்... முதல்வர் மம்தா ட்விட்டர் பதிவு

கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்திக்கிறேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மோடியின் தாயார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதேபோல், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நேவர் கிலோன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.