நாமக்கல் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆனது மாதம் தோறும் வரும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது.

இதை தொடர்ந்து இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகமானது வருகிற 26.08.2022 அன்று காலை 10.30 மணிக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் காலை நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர், மேலாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், கணக்காளர், ஏரியா மேனேஜர். டீம் லீடர், சூப்பர்வைசர், காசாளர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு, தட்டச்சர் ஆகிய பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

இதையடுத்து இம்முகாமில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் 10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள், Diploma, ITI, Graduate Degree, Post Graduate ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவே இந்த முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என கருதப்படுகிறது.

முகாமில் கலந்து கொள்ளும் நபர்கள் அனைவரும் தேர்வு செய்யப்படும் நிறுவனம் மற்றும் பணிக்கு ஏற்ப நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு உடனடியாக பணியமர்த்தப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.