ராமர் கோவில் பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்!

120 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே மூன்றாவது பெரிய கோவிலாக அயோத்தி ராமர் கோவில் உருவாக உள்ளது. இன்று இதன் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பூமி பூஜை செய்யப்படும் இடத்தில் சேர்ப்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள புனிதத் தளங்களில் இருந்து மண் மற்றும் புனித நீர் அனுப்பப்பட்டுள்ளன. கோவிலை கட்டி முடிக்க ரூ.300 கோடி செலவாகும் என்றும், 20 ஏக்கர் பரப்பளவில் தேவையான வசதிகளை உருவாக்க ரூ.1000 கோடி வரையில் செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை இன்று நடைபெற உள்ள நிலையில், 135 சாதுக்கள் உட்பட 175 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவது மட்டுமல்லாமல் பிரதமர் விமான நிலையம், சாலை விரிவாக்கம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் புறப்பட்டார்.