உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் வீரர்கள் பலியானதை ஒத்துக்கொண்டது ரஷ்யா

ரஷ்யா: ஒப்புக் கொண்டுள்ளது... கிழக்கு உக்ரைனில் உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள மகீவ்கா நகரில் தற்காலிக ராணுவ தளத்தில் 600 வீரர்கள் வரை தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

ராணுவ தளத்தின் மீது 6 ஹிமர்ஸ் ஏவுகணைகளை உக்ரைன் படைகள் வீசியதாகவும், அதில் 2 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், எஞ்சிய 4 ஏவுகணைகள் தாக்கியதில் கட்டடம் இடிந்து தரைமட்டம் ஆனதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 63 பேர் இறந்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.