மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை ... உச்சநீதிமன்றம்

சென்னை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ...... தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது கடந்த 8 ஆண்டுகளுக்கு பின் மின்சார கட்டண உயர்வை செப்டம்பர் 10 முதல் உயர்த்தி உள்ளது. மேலும் இந்த மின் கட்டண உயர்வு 100 யூனிட்க்குள் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு இல்லை என்றாலும், பல தரப்பினரையும் இது பாதித்துள்ளது என்றே சொல்லலாம்.

தமிழக மின்வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமையில் இருந்து வந்தது. மேலும் ஆண்டுக்கு ரூ. 16,511 கோடி வட்டி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதன் காரணமாக தான் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது என தமிழக அரசு சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இதனை தூது தமிழக அரசு இந்த மாத தொடக்கத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. எனவே அதன்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 10% குறைத்துள்ளது.

இதையடுத்து இந்த நிலையில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம், மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கி உள்ளது.