பைசர் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும்; பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தகவல்

விரைவில் கொரோனா தடுப்பு மருந்து... கனடாவிற்கு ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

முதலில் 30,000 டோஸ்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசிகள் தொடர்ந்து வரக்கூடும் என பொது சுகாதார நிறுவனத்தில் (பி.எச்.ஐ.சி) உள்ள தளவாடங்கள் மற்றும் செயற்பாடுகளின் துணைத் தலைவராக இருக்கும் மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 95 சதவீதம் செயற்திறனை வெளிப்படுத்தும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு செலுத்த பிரித்தானியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.