தங்கத்தின் விலை தற்போது தான் சற்று குறைந்திருகிறது

சென்னை: தங்கத்தின் விலை சற்று குறைவு .... இந்தியாவில் தங்கம் ஆபரணமாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீடாகவும் உள்ளது. இதனால் உலக அளவில் இந்தியாவில் தான் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதும், தங்க விற்பனை அதிகமாகவும் நடக்கிறது.

இதனால் தங்கத்தின் விலையின் மீதான சிறு சிறு ஏற்ற இறக்கங்கள் கூட அதிக அளவில் கவனம் பெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தங்கத்தின் விலையானது உச்சத்தில் இருந்து வந்தது

தற்போது தான் சற்று குறைந்திருகிறது. அந்த வகையில் நேற்று 1 கிராம் ரூ.4,920 க்கும், 1 பவுன் ரூ.39,360 க்கும் தங்கத்தின் விலை இருந்தது.ஆனால் இன்றைய காலை நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராம் ரூ. 15 குறைந்து ரூ.4,905க்கும், 1 சவரன் ரூ.120 குறைந்து ரூ. 39,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5351 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.