அரசு பேருந்துகளில் இலவச பயணசீட்டை இணையதளம் மூலம் பெறும் வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் தொடக்கம்


சென்னை: இணையதளம் மூலம் இலவச அரசு பேருந்து பயணசீட்டு .. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இலவச பேருந்து பயணசீட்டு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த சீட்டை நேரடியாக விண்ணப்பித்து பயணிகள் பெற்று வந்தனர்.

இதனை அடுத்து தற்போது இப்பயண சீட்டுகளை இணையதளம் மூலம் பெற ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் செய்து உள்ளது. இத்திட்டமானது பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணி குழு மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து தொடங்கப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தை பொதுவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நேற்று (செப். 7) இதனை தொடங்கி வைத்தார். எனவே இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் இனி கட்டணமில்லா பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இந்த இலவச பயணசீட்டு பெற்றுக் கொள்ள விரும்பும் தகுதி உடையவர்கள் அருகில் உள்ள இசேவை மையத்தில் அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்குரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம். அதன் பின் அதற்கான மெசேஜ் வந்ததும் பின் பயணசீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.