இன்று “ஆஸ்கர் விருது” விழா

சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது (அகாடமி விருதுகள்) வழங்கும் விழா வருடம் தோறும் நடைபெற்று கொண்டு வருகிறது. அந்த வகையில், 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கப்படவுள்ளது. இன்று இரவு 8-மணிக்கு தொடங்கப்பட இருக்கிறது.

இது இந்திய மணி நேரப்படி மார்ச் 14-ஆம் தேதி திங்கள் கிழமை காலை 5.30 மணி முதல் காலை 8.30 வரை ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. பிரமாண்டமாக நடைபெறும் இவ்விருதுவிழாவில் பல இந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். பலருக்கும் விருது வழங்கப்படவுள்ளது.

இந்தாண்டு ஆஸ்கர் விருது விழாவில் இந்திய அளவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல, சிறந்த டாகுமென்டரி திரைப்படப் பிரிவில் ‘ஆர் தட் ப்ரீத்ஸ்’ படமும், அடுத்து சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் ‘செல்லோ ஷோ’ படமும், ‘த எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ படம் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் தேர்வுக்கு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, இதில், இந்த 4 விருதுகளுக்கான போட்டியில் எந்த இந்தியப் படம் ஆஸ்கர் விருதை வெற்றி பெற்று இந்தியா சினிமாவிற்கு பெருமையை கொடுக்க போகிறது என அனைத்திந்திய சினிமாவும் மிகவும் எதிர்பார்ப்புடனும், ஆவலுடன் காத்துள்ளனர்.

இன்று விருது விழா தொடங்கப்படவுள்ள நிலையில், நேற்றிலிருந்தே பல பிரபலங்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வருகை தனது விட்டார்கள். மேலும் , கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கர் நிறுவனம் 95-வது ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது.