பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க எச்சரிக்கை

வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்... நிவர் புயல் காரணமாக தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வரும் 25ம் தேதி மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கடலோரங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயல் எச்சரிக்கையால் கடலோர பகுதிகளான கடலூர், பாம்பன், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் 6 பேரிடர் மீட்பு குழுக்கள் கடலூர் மற்றும் சிதம்பரத்தில் தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவில் ஒவ்வொரு குழுவிற்கும் 20 பேர் வீதம் மொத்தம் 120 பேரிடர் மீட்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

நிவர் புயல் காரணமாக மரக்காணம் மற்றும் பொம்மையார் பாளையம் பகுதிகளிலிருந்து 19 மீனவ கிராமங்களை சார்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1500 பைபர் படகுகள் மற்றும் 64 விசை படகுகள் 110 கண்ணா படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.