பீகார் தேர்தல் வாக்குப்பதிவின் போது இப்படி செய்யப்பட்டதா - உண்மை பின்னணி என்ன ?

சமீபத்தில் பீகார் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தேசிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் வாக்கு சாவடி ஒன்றில் வாக்காளர்களுக்கு ஒருவர் இடையூறு செய்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ சமீபத்திய பீகார் தேர்தலின் போது எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில், வாக்கு சாவடியில் உள்ள நபர் ஒருவர் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்யும் போது இடையூறு ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படி தான் பாஜக பீகார் தேர்தலில் வெற்றி பெற்றது எனும் தலைப்பில் வைரலாகி வருகிறது.

தற்போது இந்த வைரல் வீடியோவை ஆய்வு செய்தபோது, அது 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இது ஹரியானா மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். வீடியோவில் உள்ள பூத் அதிகாரி பின்னர் கைது செய்யப்பட்டார் என வந்துள்ளது.

உண்மையில் இந்த சம்பவம் 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்றது ஆகும். அந்த வகையில் வைரல் வீடியோ பீகார் தேர்தலின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்படலாம். எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.