புகைப்படம் மாறிய விவகாரத்தில் மன்னிப்பு கோரினார் யாஸ்மின் சூகா

புகைப்படம் மாறிய விவகாரத்தில் பிரிகேடியர் ரவீந்திர டயஸிடம் மன்னிப்பு கோரினார் யாஸ்மின் சூகா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியின் படத்திற்கு பதிலாக இலங்கை ராணுவத்தின் பிரிகேடியர் ரவீந்திர டயஸின் படத்தை தவறாக பயன்படுத்தியதற்காக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூகா மன்னிப்பு கோரியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் நான்கு இரானுவத்தினர் பிரிகேடியர் தரத்தில் இருந்து மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டமை தொடர்பில் கடந்த ஜூன் முதலாம் திகதி விஷேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார் யஸ்மின் சூக்கா.

இந்த அறிக்கையில் சுரேஷ் சாலியின் படத்திற்கு பதிலாக பிரிகேடியர் ரவீந்திர டயஸின் படத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பிரிகேடியர் ரவீந்திர டயஸின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாஸ்மின் சூகா தனது வழக்கறிஞர்களின் ஆலோசனையில் “குறித்த படத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக பிரிகேடியர் ரவீந்திர டயஸிடம் மன்னிப்பு கோரியதாகவும், பொது மன்னிப்பு மற்றும் திருத்த அறிக்கையை வெளியிட்டதாகவும்” ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.