அசத்தல் சுவையில் பப்பாளிக்காய் பொரியல் செய்யலாம் வாங்க!!!

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பப்பாளிக்காய் பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

தேவையானவை

பப்பாளிக்காய் -சிறிய சைஸ் 1
பெரிய வெங்காயம் 1,
பச்சை மிளகாய் 3,
மலர வெந்த துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் தலா 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு அரை டீஸ்பூன்,
உளுந்து 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு,
உப்பு தேவைக்கு.

செய்முறை: பப்பாளிக்காயை தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து வடித்து வையுங்கள்.

எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் வேகவைத்த காய், தேங்காய்த் துருவல், துவரம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். அருமையான சுவையில் பப்பாளிக்காய் பொரியல் ரெடி.