மணக்க, மணக்க இறால் மீன் சுக்கா செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்க

சென்னை: மணக்க, மணக்க இறால் மீனில் சுவையான சுக்கா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
இறால் – 1/2 கிலோகுடைமிளகாய் – 1வெங்காயம் – 100 கிராம்தக்காளி – 100 கிராம்எண்ணெய் – தேவையான அளவுகல் பாசி – சிறிதளவுஅன்னாசி பூ – 2காய்ந்த மிளகாய் – 10இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் – சிறிதளவுமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு, எண்ணெய் – தேவையான அளவுகறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை: முதலில் இறால் மீனின் தோடை உரித்து விட்டு அதன் சதை பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். பின் நன்றாக கழுவி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஊறவைக்கவும். அதன்பின் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி இறாலை பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பின் சிறிதளவு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அன்னாசி பூ மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு கலவையை போட்டு பிரவுன் நிறம் வரும் வரை வதக்கவும். பின்பு அதனுடன் மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி மற்றும் உப்பு போட்டு தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கவும். வதங்கியதும் வறுத்த இறால் மற்றும் வெட்டிய குடை மிளகாயை சேர்க்கவும். பின்பு வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வெட்டிய பச்சை மிளகாயை அதன்மேல் வைத்து பரிமாறவும். சுவையான இறால் சுக்கா ரெடி.