ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அவல் பொங்கல் செய்முறை

சென்னை: காலையில் இட்லி, சட்னி செய்து சலித்துவிட்டதா? அடுத்த படியாக சுலபமாக செய்யும் பலகாரம் உப்புமா, பொங்கல் தான். சாதாரணமாக பொங்கல் பச்சரிசியைய் வேகவைத்து செய்வோம். இன்னும் சுலபமாக குறைவான நேரத்தில் மிக வேகமாகவும், சுவையாகவும், செய்யக்கூடிய அவல் பொங்கல் செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :
அவல் -1 கோப்பைபாசிப்பருப்பு- 1/4 கோப்பைநெய்-2 மேஜைக்கரண்டி 1+1 அல்லது 1 மேஜைக்கரண்டி நெய் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்இஞ்சி துருவியது-2 தே .க 1+1 (பத்தி வேகவைக்க பாதி தளிக்க).சீரகம்-1/4 இரண்டும் பங்காக்கிக்கொள்ளவும் (பத்தி வேகவைக்க பாதி தளிக்க).மிளகுதூள்-1/4 தே .கதளிக்க:மிளகு-1/4 தே .கசீரகம் -மேற் கூறியதில் பாதி அளவுமுந்திரிப்பருப்பு-1 மேஜைக்கரண்டிபச்சைமிளகாய்-2 கீரியதுகறிவேப்பிலை-1 கொத்து

செய்முறை::.பாசிப்பருப்பை வானலியில் ஒரு நிமிடம் வரை வறுத்து, தண்ணீர் விட்டு,பாதி அளவு துருவிய இஞ்சியையும், ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து பூப்போன்று வேகவைத்துக்கொள்ளவும். அவலை நன்கு அலசி 5 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.

வானலியில் நெய் விட்டு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வறுத்துக்கொள்ளவும்.பாதி துருவிய இஞ்சி, கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்போது ஊறவைத்த அவல், உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு அதன் தண்ணியோடு சேர்த்து நன்கு கிளறவும். மிதமான தீயில் பொங்கல் பதம் வரும்வரை சமைத்து,சிறிது மிளகுத்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து இறக்கவும். சுவையான அவல் பொங்கல் தயார்.