அசத்தல் சுவையில் பேபி கார்ன் 65 செய்முறை

அசத்தல் சுவையில் குழந்தைகள் விரும்பி சாப்பிட பேபி கார்ன் 65 எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையானவை:

பேபி கார்ன் - 10
சாட் மசாலா பவுடர் - 1/4 டீஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: பேபி கார்னை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து மைதா, அரிசி மாவு, சோள மாவு, எலுமிச்சை சாறு, தயிர், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள், சமையல் சோடா, உப்பு ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளவும்.

அதில் தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, பேபி கார்ன்னை மாவில் பிரட்டி பொரித்து எடுக்கவும். இறுதியில் அதன் மேல் சாட் மசாலாவைத் தூவினால், பேபி கார்ன் 65 ரெடி.