உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பார்லி, ஓட்ஸ் கட்லெட்

உருளைக் கிழங்கு, சிக்கன், மட்டன் போன்றவற்றில்தான் கட்லெட் செய்து சாப்பிட்டு இருக்கிறோம், சத்துகள் நிறைந்த பார்லி, ஓட்ஸ், கேரட் கட்லெட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

பார்லி - 1 கப்
ஓட்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கேரட் துருவல் - கால் கப்
பீன்ஸ் - 10
கொத்த மல்லி- சிறிதளவு
கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்த மல்லியினை நறுக்கி கொள்ளவும். பார்லியை வேக வைத்து கொள்ளவும். அதேபோல் ஒட்ஸினை உடைத்துக் கொள்ளவும்.

பார்லியினை தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். பின்னர் கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வேக விடவும்.
அடுத்து கரம் மசாலா தூள், கொத்தமல்லி சேர்த்து வேகவிடவும்.
அடுப்பில் இருந்து கலவையை இறக்கி பார்லி, ஒட்ஸ், உப்பு சேர்க்கவும். இதனை தோசை கல்லில் போட்டு ண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுத்தால் பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட் ரெடி.