எடை அதிகரிப்பைத் தடுக்கும் பார்லி வெஜிடபிள் சூப் செய்முறை

சென்னை: இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க பார்லி உதவுகிறது. இதய நோயாளிகளுக்கு பார்லி ஒரு அற்புதமான உணவு.

தேவையானவை:பார்லி தூள் – 2 டீஸ்பூன் ( பார்லியை நன்கு கழுவி உலர்த்திய பின் கடாயில் வறுத்து அரைத்தால் பார்லி பொடி தயார்)பார்லி அரிசி – 4 டீஸ்பூன்பீன்ஸ், கேரட் – தலா 50 கிராம்மிளகு தூள் – 3 டீஸ்பூன்வெங்காயதாள் – சிறிதுதுளசி இலை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு

செய்முறை: கேரட், பீன்ஸ் மற்றும் வெங்காயதாளை பொடியாக நறுக்கவும். பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பின் நன்றாக வேகவைக்கவும்.

பீன்ஸ் மற்றும் கேரட்டை தனித்தனியாக வேகவைக்கவும். கடாயில் வேகவைத்த பார்லி அரிசி, வேகவைத்த பீன்ஸ், கேரட் போட்டு தேவையான அளவு உப்பு, பார்லி தூள், தண்ணீர் சேர்த்து கொதித்ததும் மிளகு, உப்பு, நறுக்கிய வெங்காயதாள், சிட்டிகை துளசி இலை போட்டு கொதித்ததும் சுவையான பார்லி வெஜிடபிள் சூப் ரெடி.