வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்த பீட்ரூட், பன்னீர் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : பீட்ரூட் - 200 கிராம் பன்னீர் - 100 கிராம் கோஸ் கேரட் - தலா 50 கிராம் கெட்டி தயிர் - தேன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட்டை தோல் நீக்கி வட்டமாக வெட்டி நீராவியில் 5 நிமிடங்கள் வேகவிட வேண்டும். பன்னீரை அதே அளவுக்கு மிக மெல்லியதாக வெட்டி பீட்ரூட் மேல் அடுக்கவும். ஓர் அடுக்கு பீட்ரூட் எனில் அடுத்த அடுக்கு பன்னீர் என்ற ரீதியில் இருக்க வேண்டும். கேரட் கோஸ் போன்றவற்றைச் சீவி அவற்றுடன் கெட்டி தயிர் தேன் சேர்த்துக் கலக்கி சாலட் மீது வைக்கவும்.