சளி, இருமலை போக்கும் சிறந்த உணவு... நண்டு ரசம் செய்முறை

சென்னை: நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் ரசம் இன்றியமையாத ஒரு இடத்தை பெற்று இருக்கும். ரசமானது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு மிகவும் உதவுகிறது. காய்ச்சல்,சளி, இருமல் போன்றவற்றால் அவதிப்படும் போது ரசம் சாதம் சாப்பிட்டால் சற்று நிவாரணம் கிடைக்கும்.

மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம், புதினா ரசம், என்று பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஒவ்வொரு ரசமும் ஒவ்வொரு விதத்தில் ஒரு சுவையும்,மணமும் தரும். அந்த வகையில் இன்று நாம் நண்டு வைத்து ஒரு சூப்பரான ரசம் செய்ய உள்ளோம். தலை வலி, தலை பாரம், சளி, இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற தொந்தரவு உள்ளவர்கள் இதனை ஒரு முறை செய்து சாப்பிட்டால் போதும் நல்ல நிவாரணம் கிடைக்கும் .வாருங்கள்! காரசாரமான நண்டு ரசம் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
நண்டு – 1/4 கிலோமல்லித்தழை-கையளவு

அரைப்பதற்கு:
சின்ன வெங்காயம் – 2தக்காளி – 2பச்சைமிளகாய் – 3பூண்டு – 4 பற்கள்இஞ்சி – சிறிதுநல்லெண்ணெய் – தேவையான அளவுஉப்பு- தேவையான அளவு

தாளிக்க:கடுகு- 1/4 ஸ்பூன்சீரகம்- 1/4 ஸ்பூன்மிளகு- 1/4 ஸ்பூன்சோம்பு – 1/2ஸ்பூன்,கறிவேப்பிலை- 1 கொத்துஎண்ணெய் -தேவையான அளவு

செய்முறை: முதலில் நண்டினை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம்,தக்காளி,மல்லித்தழை ஆகியவற்றை மிகப் பொடியாக அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடான பின் அதில் இஞ்சி,பூண்டு, வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட்டு பின் அதனை ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு மண்சட்டி வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நண்டு சேர்த்து அரைத்த வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சுமார் 10 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். நண்டு நன்றாக வெந்த பிறகு அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு,சீரகம்,மிளகு,சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து நண்டு உள்ள சேர்த்து சிறிது பரிமாறினால் அருமையான நண்டு ரசம் ரெடி! இதனை சூப் போன்று பருகலாம் அல்லது சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.