உடல் சூட்டை தணிக்க உதவும் ப்ரூட் லஸ்ஸி

சென்னை: லஸ்ஸி பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா. வெயிலில் அலைந்து விட்டு ருசியாக அதே நேரத்தில் பிடித்தமான ஒன்றை சாப்பிடலாம் என்றால் நிச்சயம் அனைவருக்கும் லஸ்ஸி ஞாபகம் வந்து விடும். அந்த வகையில் ஃப்ரூட் லஸ்ஸி செய்து பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை: ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள் – தலா 1, ஸ்ட்ராபெர்ரி – 4, உலர்ந்த திராட்சை – 10, சர்க்கரை – ஒரு கப், புளிப்பில்லாத தயிர் – 200 மில்லி.

செய்முறை:வாழைப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கவும். ஆப்பிளை தோல் சீவி பொடியாக நறுக்கவும். ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கவும். ஆரஞ்சை சுளைகளாக உரித்து, கொட்டையை நீக்கிக் கொள்ளவும். அனைத்து பழங்களையும் ஒன்று சேர்த்துக் கலந்து, உலர்ந்த திராட்சையை சேர்க்கவும்.

பிறகு தயிர், சர்க்கரை சேர்த்து ஸ்பூனால் நன்கு கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் மிக்ஸியில் ஒரு முறை சுற்றியும் கொடுக்கலாம். வெயில் காலத்துக்கு ஏற்றது இந்த ஃப்ரூட் லஸ்ஸி. இது, உடல் சூட்டையும் நீர்க்கடுப்பையும் உடனே தணிக்கும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.