சீத்தாப்பழம் மில்க் ஷேக் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியாக சீத்தாப்பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்:

சீத்தாப்பழம் - 1-2 (நன்கு கனிந்தது)
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
குளிர்ந்த பால் - 1 கப்

செய்முறை: முதலில் சீத்தாப்பழத்தின் உள்ளே இருக்கும் தசைப்பகுதியை கரண்டியால் எடுத்து, மிக்சர் ஜார்/பிளெண்டரில் போட்டு, 1/4 கப் பால் ஊற்றி, சில நிமிடங்கள் நன்கு அரைத்து, அதில் உள்ள விதைகளை எடுத்துவிட வேண்டும்.

பின்னர் அதில் சர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அரைத்ததை ஒரு டம்ளரில் ஊற்றினால், சுவையான சீத்தாப்பழம் மில்க் ஷேக் தயார்.