நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது. இதில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வாருங்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தேவையானப் பொருட்கள் :
கொய்யாப்பழம் நறுக்கியது - 1 கப் நாட்டு சர்க்கரை - சுவைக்கேற்ப பால் - 2கப் தண்ணீர் - 1கப் வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன் ஜஸ் கட்டி - தேவையான அளவு செய்முறை: கொய்யாப்பழம், நாட்டு சர்க்கரை இரண்டையும் மிக்சியில்
போட்டு அரைக்கவும். அதனுடன் பால் , தண்ணீர் வெண்ணிலா எசன்ஸ் இவை
அனைத்தையும் மிக்ஸியில்போட்டு நன்றாக அடிக்கவும். கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.
இது
குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை தூண்டும். ஆரோக்கியமானது.
கொய்யாப்பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. இது உடலின் நோய்
எதிர்ப்புசக்தியை அதிகரிக்க செய்யும்.