ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும் கொத்தமல்லி தழை பொட்டுக்கடலை சட்னி

சென்னை: அருமையான ருசியில் கொத்தமல்லிதழை பொட்டு கடலை சட்னி செய்து பாருங்கள். கொத்துமல்லி கீரை எடை குறைக்கவும், உடம்பிலுள்ள கழிவுகளை அகற்றவும், இரத்தத்தை சுத்தபடுத்தவும் உதவுகிறது.

தேவையானவை: கொத்தமல்லி தழை - ஒரு பஞ்ச் லெமன் - அரை பழம் பெரிய பச்ச மிளகாய் - ஒன்று இஞ்சி துறுவல் - கால் ஸ்பூன் தேங்காய் துறுவல் - இரண்டு மேசை கரண்டி வெங்காயம் - அரை ( தேவைபட்டால்) பொட்டு கடலை - ஒரு கை பிடி உப்பு - கால் ஸ்பூன் (ருசிக்கு ஏற்ப கூட்டிகொள்ளவும்)

செய்முறை: கொத்துமல்லி தழையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும். சிறிது நேரம் தண்ணீரில் மூழ்க வைத்தாலே மண் அடியில் தங்கிவிடும். மிக்சியில் பொட்டுகடலை,பச்சமிளகாய், தேங்காய் இது முன்றையும் ஒரு திருப்பு திருப்பவும்.

பிறகு இஞ்சி துறுவல், லெமன் சாறு,உப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். தோசை, ஆப்பம், இட்லி, உப்புமா, சேமியா பிரியாணி, குழிபணியாரம் எல்லா வகையான உணவுகளுக்கும் பொருந்தும்