அருமையான சுவையில் மொறுமொறுப்பான காளான் பக்கோடா செய்முறை

காளானில் பிரியாணி, கிரேவி, பப்ஸ் எனப் பலவகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம். இப்போது காளானில் மொறுமொறுப்பான பக்கோடா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:


காளான் - 50 கிராம்
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை கப்
துவரம்பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - 5
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: காளானை சுத்தம் செய்து கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி, மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவை, காளான், கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை வழக்கமான பக்கோடாவாகப் பொரித்து எடுத்தால் காளான் பக்கோடா ரெடி. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மாலை நேரத்தில் சூடாக செய்து கொடுத்து அசத்துங்கள்.