ருசி மிகுந்த குழந்தைகள் விரும்பும் பிரட் வடை செய்முறை

பொதுவாக நாம் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றிலேயே வடைகள் செய்து சாப்பிட்டு இருப்போம். ரொம்பவும் மொறுமொறுப்பான டேஸ்ட்டியான பிரட் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பிரட் துண்டு - 2
நறுக்கிய கேரட் - அரை கப்
பச்சை மிளகாய் - 1
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு
சோள மாவு - 2 டீஸ்பூன்
தண்ணீர் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை: பிரட்டை சிறுசிறு துண்டுகளாக பிய்த்து அதில் கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, உப்பு, இஞ்சி, சீரகம், கொத்துமல்லி ஆகியவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும். வடை மாவு பதத்தில், வடைகளாக தட்டி எண்ணெய் ஊற்றி லேசாகப் பொரித்தாலே முழுமையாக வெந்துவிடும். தற்போது சுவையான பிரட் வடை தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.