ருசியான முறையில் மட்டன் தொக்கு செய்முறை

மட்டனில் பொதுவாக குழம்பு, பிரியாணி, கிரேவி, வறுவல் ரெசிபிகளை செய்து ருசி பார்த்துள்ளோம். அந்தவகையில் இப்போது மட்டனில் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

மட்டன் - 1/2 கிலோ
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
இஞ்சி- பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை: மட்டனுடன் தயிர், உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறி குக்கரில் போட்டு தண்ணீர் வற்றும் அளவு வேகவிடவும்.

இறுதியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் மட்டன் தொக்கு ரெடி.